Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“சுஜீத்தின் மரணம் மனதிற்கு வேதனையளிக்கிறது”… நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்..!!

சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுகாட்டுப்பட்டியில் சுஜித் வில்சன்  (2 வயது) சிறுவன் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் முயற்சித்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை.

அவனை இன்று அதிகாலை சடலமாகவே மீட்க முடிந்தது. பின்னர் சுஜித் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பாத்திமா புதூர் கல்லறைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. சிறுவன் சுஜித் உடலுக்கு அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் மனமுருக கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Image result for ரஜினிகாந்த் இரங்கல்..!!

அதன்படி நடிகர் ரஜினிகாந்தும் தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். அதில் சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |