Categories
சினிமா

அடேங்கப்பா!…. நடிகர் ரஜினிக்கு மேடையிலேயே குடை பிடித்த அமைச்சர்…. வைரலாகும் புகைப்படம்….. வியப்பில் ரசிகர்கள்….!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக பலம் வந்த புனித் ராஜ்குமார் (46) கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புனித் ராஜ்குமாரின் தொண்டு மற்றும் சேவையை கௌரவிக்கும் விதமாக முதல்வர் பசுவராஜ் பொம்மை கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்ற நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு புனித் ராஜ்குமாரின் மனைவியிடம் கர்நாடகா ரத்னா விருதை வழங்கினார்.

இந்நிலையில் நிகழ்ச்சியின் போது நடிகர் ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் ஒருவர் குடை பிடித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது அமைச்சர் முனிரத்தினா அவருக்கு குடை பிடித்து இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில், ஒரு அமைச்சர் ஒரு நடிகருக்கு குடை பிடித்து இருக்கிறாரா என்று ரசிகர்கள் வியப்போடு கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |