நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் நடந்த ஆரம்பகால நிகழ்வுகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாலச்சந்தர். நடிகர் ரஜினிகாந்த், சிகரெட்டை ஸ்டைலாக போடுவதில் தொடங்கி, தலைமுடியை வருடுவது, விருவிருப்பாக வசனங்கள் பேசுவது, வில்லத்தனத்தால் கவருவது போன்று தனக்கென்று தனியிடத்தை பிடித்தார்.
அதன்பின்பு, ஒவ்வொரு திரைப்படத்திலும் கதாநாயகனாக அசத்தி ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இந்நிலையில் ரஜினி காந்த், ஆரம்ப வாழ்க்கையில் சிவாஜி ராவாக பெங்களூரில் வாழ்ந்த போது, இருந்த அவரின் செயல்பாடுகளுக்கும், இப்போது ரஜினிகாந்தாக இருக்கும் அவருக்கும் பல வேறுபாடுகள் உள்ளது என்று அவரே பல நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார்.
சிவாஜி ராவாக இருந்த காலகட்டத்தில், அவர் முன் கோபமுடையவராக இருந்தாராம். எனவே, பெங்களூரில் அடிக்கடி பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வாராம். எனினும், சிறிது காலங்களுக்குப் பிறகு பொறுப்புணர்வுடன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் முன்கோபத்தை குறைத்துக் கொண்டாராம்.
ஆன்மீகத்தில் அதிக பற்றுடைய ரஜினிகாந்த் அதன் மூலமாக தன் மனதை ஒரு நிலைப்படுத்தி கோபத்தை குறைத்திருக்கிறார். நினைத்ததை முடித்தே தீர வேண்டும் என்ற எண்ணமுடைய ரஜினிக்கு தற்போதும் அடிக்கடி கோபம் வரும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் தன் அடுத்த திரைப்படத்தை பெரிய ஹிட்டாக்கி, தான் யார் என்பதை மீண்டும் நிரூபிப்பதற்கு முடிவெடுத்திருக்கிறாராம் ரஜினி. எனவே அடுத்த திரைப்படத்தில் அனைவரும் அவரை பழைய ரஜினியாக பார்க்க முடியும் என்று ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.