நடிகரும் முன்னணி ஆங்கருமான ரியோ ராஜ், தமிழ் சினிமாவில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னரே, தனது நெடுநாள் காதலியான ஸ்ருதியை திருமணம் செய்துகொண்டார் ரியோ. திரைத்துறையில் தற்போது இவர் ஆர்வம் காட்டிவரும் நிலையில் ஸ்ருதி கர்ப்பமான செய்தி வெளியானது.
இந்நிலையில் தற்போது அவருக்குச் சிறப்பாக வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இதில் பிரபல சீரியல் நடிகர்கள், நடிகைகள் பலரும் கலந்துகொண்டு ரியோ தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் நடிகர் சிவகார்த்திகேயன் வளைகாப்பு நிகழ்வில் கலந்துகொண்டு, காதல் தம்பதிகளுக்கு சர்ப்ரைஸ் அளித்தார். மேலும் வளைகாப்பு நாயகிக்கு வளையலையும் பரிசளித்துள்ளார். தற்போது, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் ரியோ நடித்து வருகிறார். ரம்யா நம்பீசன் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
Hearty Congratulations @rio_raj bro to promote as a proud Father Soon. Congrats #RioRaj & #SruthiRio #KollywoodCinima pic.twitter.com/8FmeNoLgrH
— Kollywood Cinima (@KollywoodCinima) November 23, 2019