சமீபத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களின் பெயரில் டுவிட்டர் பக்கம் ஒன்று ஓபன் செய்யப்பட்டு வைரலாகி வரும் சூழ்நிலையில், டுவிட்டர் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது என அவர் கருத்து தெரிவித்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடைபெற்று வரக்கூடிய கோளாறு என்னவென்றால், பிரபலங்கள் நிறைய பேர் இது போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி இருக்கவே மாட்டார்கள். அப்படி இருக்கும் நபர்களின் பெயர் பட்டியல்களை கண்டறிந்து அதிக followersகளை பெற வேண்டும் என்ற பேராசையில் அவர்களது பெயர்களை கொண்டு ட்விட்டர் கணக்கை தொடங்கி இது எனது அதிகாரப்பூர்வ கணக்கு என்று பீலா விட்டு அதிக follower களை பெற்றுக்கொள்வார்கள்.
இன்னும் ஒரு சிலர் அதிக அளவு followers வந்த பின்பு அதே நடிகர் பெயரில் சிலர் சிறிய நிறுவனங்களுக்கு விளம்பரம் காசு வாங்கிக்கொண்டு விளம்பரம் செய்ய ஆரம்பிப்பார்கள். இது சமீபத்தில் நடந்து வரக்கூடிய ஒரு பிரச்சனையாகும். இதேபோல் சமீபத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் ட்விட்டர் கணக்கு எனக் கூறிக்கொண்டு ஐடி ஒன்று ட்விட்டரில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
Follower களும் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே செல்கிறார்கள். அது யார் என்று பார்த்தால் அதுதான் நகைச்சுவை நடிகர் செந்தில் குமார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு தெரிந்தத ஊடகத்துறை இரண்டே இரண்டுதான். ஒன்று பத்திரிக்கை, மற்றொன்று சினிமா இந்த இரண்டு ஊடகத்துறையும் தவிர வேற எந்த ஊடகத்துறையும் எனக்கு தெரியாது.
டுவிட்டர், பேஸ்புக் இது போன்றவற்றை எல்லாம் நான் உபயோகித்ததே கிடையாது. அப்படி என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. எனவே பொய்யான கணக்குகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் கொரோனா பாதிப்பு உள்ள இந்த சூழ்நிலையில், அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து குடும்பங்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.