Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. தளபதியின் வாரிசு திரைப்படத்தில் இணைந்த நடிகர் சிம்பு…. புதிய அப்டேட்டால் செம குஷியில் ரசிகாஸ்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ யோகி பாபு, சாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், தெலுங்கு ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு வாரிசு படப்பிடிப்பில் யானைகளை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக தற்போது புகார் எழுந்துள்ள நிலையில், வன அதிகாரிகள் வாரிசு படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இப்படி வாரிசு படக்குழுவுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் வருவதால் விஜய் ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ஒரு மகிழ்ச்சி அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது வாரிசு திரைப்படத்தில் பிரபல நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் சிம்பு தி வாரியர் படத்தில் பாடியிருந்த புல்லட் சாங் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |