மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற டிரைவிங் லைசென்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் சிம்புவும், எஸ்.ஜே சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி நடிகர் சிம்பு மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையுடன் வெளியான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வகையில் இருந்தது. எனவே, ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது.
இதனைத்தொடர்ந்து, நடிகர் சிம்புவும், எஸ்.ஜே சூர்யாவும் இணைந்து மற்றொரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான, டிரைவிங் லைசென்ஸ் என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் இவர்கள் இருவரும் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.