தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சிம்புவுக்கு சில காலமாக பட வாய்ப்புகள் எதுவும் அமையாத நிலையில், மாநாடு என்ற திரைப்படத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்துக் கொண்டு மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு படத்திற்கு 35 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். ஆனால் நடிகர் சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.