Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவாஜியின் குடும்பத்தில் சொத்து தகராறு….. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

மறைந்த பிரபல நடிகர் நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம் குமார் என்ற இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்திற்கு பிறகு ரூ.270 கோடி சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும் வீடுகளின் வாடகை பங்கு தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜீவ் ஆகிய இருவர் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அதில், இந்து‌ வாரிசுரிமை சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் படி தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு உரிமை உள்ளது. எனவே பாகப்பிரிவினை செய்து தர உத்திரவிட வேண்டும். தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை ராம்குமார், பிரபு விற்று உள்ளனர். அந்த விற்பனை பத்திரங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் 1000 சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபு, ராம்குமார் அபகரித்துக் கொண்டனர்.

அதனைதொடர்ந்து சாந்தி தியேட்டரில் இருந்த ரூ.82 கோடி பங்குகளை ராம்குமார் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது. பொது அதிகாரம் பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ராம்குமார், பிரபு ஏமாற்றி விட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்நிலையில் சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனை தடை விதிக்க கோரிய வழக்கில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சாந்தி தியேட்டர் விவாகரத்தில் அனைத்து நடைமுறைகளை ஏற்கனவே முடிந்து விட்டது என்று நடிகர் பிரபு தரப்பும், சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010ஆம் ஆண்டிலும் கை மாறி விட்டது என்று தனியார் கட்டுமான நிறுவனமும் விளக்கமாளிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு விளக்கத்தையும் ஏற்று சிவாஜி மகள்கள் சாந்தி ராஜ்வி ஆகியோரின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Categories

Tech |