Categories
இந்திய சினிமா சினிமா

அடடே!…. “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி, விஜய் சேதுபதியின் படங்கள்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. அந்த வகையில் நடிகர் சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற திரைப்படங்களான கர்ணன் மற்றும் திருவிளையாடல் போன்ற திரைப்படங்கள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் திரையிடப்படுகிறது.

இதேபோன்று சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படமும் திரையிடப்படுகிறது. மேலும் டிசம்பர் 13-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சிவாஜியின் திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படமும், டிசம்பர் 14-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சிவாஜியின் கர்ணன் திரைப்படமும், டிசம்பர் 12-ம் தேதி மதியம் 2 மணிக்கு விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படமும் திரையிடப்படுகிறது.

 

Categories

Tech |