Categories
சினிமா

அடடே! ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற சூர்யா…‌. திடீர் விசிட்…. மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு….. போட்டோ வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வணங்கான், வாடிவாசல் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் பெயரிடப்படாத ஒரு படம் போன்றவற்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்திற்கு அண்மையில் தேசிய விருது கிடைத்தது.

அதன் பிறகு நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் மற்றும் சூரரை போற்று திரைப்படங்கள் தற்போது பல்வேறு விருதுகளில் தேர்வு செய்யப்பட்டு விருதுகளை குவித்து வருகிறது. மேலும் நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்படும். மேற்கண்ட மாநிலங்களில் நடிகர் சூர்யாவின் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரசிகர்கள் நடிகர் சூர்யாவை சந்திக்க வேண்டும் என விருப்பப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர்களை சந்தித்தார்‌. இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது நடிகர் சூர்யாவுக்கு மாலை அணிவித்து ரசிகர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். மேலும் நடிகர் சூர்யாவின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது எல்லாம் தமிழகத்தில் மட்டும் இன்றி மற்ற மாநிலங்களிலும் கட்டவுட்டுகள் வைப்பது, தியேட்டர்களில் கொடி, தோரணங்கள் மற்றும் பட்டாசுகள் வெடிப்பது என சூர்யாவின் படங்களை கொண்டாடுகின்றனர்.

Categories

Tech |