நடிகர் சூர்யா அரசியலுக்கு வரலாம் என்று நடிகர் சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கின்றார்.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நேற்று நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் விவகாரம் எதிரொலித்தது .
அதே போல நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை கொண்ட நிகழ்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. கொரோனா காரணமாக நீதிமன்றங்கள் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகின்றது என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதேபோல் சூர்யா பேசிய கருத்தில் எந்த அவமதிக்கும் இல்லை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற 6 நீதிபதிகளும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தனர். இதுகுறித்து நடிகர் சௌந்தரராஜன் கூறும் போது, கேள்வி கேட்பதற்கும் சூர்யா அண்ணனுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே உரிமை இருக்கிறது. கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அது அவருக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
காரணம் என்னவென்றால் அவர்கள் குடும்பமே கல்விக்காக அகரம் பவுண்டேஷன் என்ற ஒன்றை நடத்தி நிறைய அதிக மதிப்பெண் எடுத்து படிக்க முடியாமல் இருக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார்கள். என்னை பொருத்தவரை அண்ணன் சூர்யா அரசியலுக்கு வரலாம். முக்கியமாக இந்த கல்வி துறைக்கு சூர்யா மாதிரி ஆட்கள் எல்லாம் வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், அவர்களுக்கு நான் ஆதரவு தருகிறேன் என்று திரைப்பட நடிகர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.