Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சூர்யாவின் அடுத்த அதிரடி – சூப்பரான அறிவிப்பால் குவியும் பாராட்டு …!!

கொரோனா தடுப்பில் முன்களப்பணியாளர்களாக செயல்படுவோரின் குழந்தைகளின் கல்வி செலவுக்கு நடிகர் சூர்யா 2.5 கோடி வழங்கியுள்ளார்.

கொரோனா  பேரிடர் காலத்தில் அரசு தடுப்பு பணிகளை மேற்கொள்ள நிவாரண உதவிகளை திரைப்பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வழங்கி வருகின்றனர். நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கூட தஞ்சாவூர் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க நிவாரணம் வழங்கினார். அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க செயல்பட்ட மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மயானப் பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 2.5 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.

இவர்களின் குடும்பத்தில் பள்ளி கல்விலூரி பயில்வோருக்கு ரூ. 10,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று  நடிகர் சூர்யா சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. www.agaram.in மூலம் உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |