Categories
சினிமா

மக்களே…! இனி கட்டாயம் இதை செய்யுங்க…. நம்ம வைகைப்புயல் சொன்ன அட்வைஸ்…!!!!

நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேலு, மக்கள் பொது இடங்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

நகைச்சுவை நடிகரான வடிவேலு, தன் நகைச்சுவை திறனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டவர். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின்பு சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடிவேலு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதாவது, “பொது இடங்களுக்கு, மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

Categories

Tech |