தமிழ் திரையுலகில் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நடிகர் வெற்றி திடீரென்று ரகசியமாக திருமணம் செய்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான வெற்றி, சிறப்பான மற்றும் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், குறைவான பட்ஜெட்டில் திரைக்கதையை மட்டுமே நம்பி தயாரிக்கப்படும் படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார்.
இவர் நடித்த 8 தோட்டாக்கள் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு ஜீவி என்ற திரைப்படம் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளிவந்து ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும், சமீபத்தில் வனம் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில், வெற்றி திருநெல்வேலியில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில், ரகசியமாக திருமணம் செய்திருக்கிறார். இவரின், திருமண புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.