Categories
சினிமா

எவ்ளோ முயற்சித்தும் அஜித்தால முடியல…. சாதித்து காட்டிய தளபதி…. குத்தாட்டம் போடும் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய், பீஸ்ட் திரைப்படத்திற்காக மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தன் சொந்த குரலில் பேசியிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் உச்ச நடிகர்களாக வலம் வரும் நடிகர் அஜித் மற்றும் விஜய்யின் ரசிகர்களுக்கு இடையே எப்போதும் கடும் போட்டியும் சண்டையும் ஏற்படும். அதன்படி தற்போது நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கிறது.

இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், கொரோனா காரணமாக படம் வெளியாவது தள்ளிப்போனது. இதேபோல நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளியாக தயார் நிலையில் இருக்கிறது. இத்திரைப்படமும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் உருவாகி இருக்கிறது.

எனவே, விஜய் பீஸ்ட் திரைப்படத்திற்காக தமிழ் மட்டுமன்றி தனக்கு தெரியாத மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தானே டப்பிங் பேசி அசத்தியிருக்கிறார். ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பு மட்டுமின்றி நடனம், பாடல் என்று ஆல்-ரவுண்டராக வலம் வருவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிற மொழிகளிலும் தன் சொந்த குரலிலேயே அவர் பேசியிருப்பதை அறிந்த ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள்.

மேலும், முக்கியமாக நடிகர் அஜீத் குமார், தன் மற்ற மொழி திரைப்படங்களுக்கு டப்பிங் செய்ய பலமுறை முயற்சி மேற்கொண்டிருக்கிறார். ஆனால், தளபதி விஜய் அதனை சாதாரணமாக செய்து அசத்தியிருப்பதாக அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Categories

Tech |