Categories
சினிமா

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி..!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், கேரள மாநிலத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார். இதுதவிர, ஃபெப்ஸி அமைப்புக்கு 25 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கு தலா 5 லட்சமும் வழங்கியுள்ளார்.

அதேபோல, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்திற்கு நடிகர் விஜய் ரூ.25 லட்சம் உதவி வழங்கியுள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 3,869 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவும் 29வது நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, தடுப்பு பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ. 1.30 கோடி நிதி வழங்கியுள்ளார். அனைத்து தென்மாநிலங்களுக்கும் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களையும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |