Categories
சினிமா

“ச்ச! என்ன மனுஷன் யா…. ரசிகரின் திருமணத்திற்கு அறிவிப்பின்றி வந்த மக்கள் செல்வன்…. இன்ப அதிர்த்தியில் மணமகன்…!!!

திண்டிவனத்தில் நடந்த ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு முன்னறிவிப்பு இல்லாமல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பங்கேற்றது புதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் இளைஞரணி தலைவராக இருக்கும் புகழேந்தி என்பவருக்கும் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திண்டிவனத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது, ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி, முன்னறிவிப்பின்றி திடீரென்று வாகனத்தில் வந்து இறங்கினார்.

இதனைச் சிறிதும் எதிர்பாராமல் இருந்த மணமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கினர். ரசிகர்களின் வெள்ளத்தில் தத்தளித்த படி விஜய்சேதுபதி மணமேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு மணமகன் புகழேந்தியை கட்டி அணைத்து முத்தமிட்டார். இன்ப அதிர்ச்சியில் புகழேந்தி ஆனந்த கண்ணீர் வடித்தார். அதன்பின்பு ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட விஜய்சேதுபதி அங்கிருந்து புறப்பட்டார்.

Categories

Tech |