Categories
சினிமா தமிழ் சினிமா

“தெலுங்கு திரையுலகில் பட்டையை கிளப்பும் விஜய்சேதுபதி!”.. 2 ஆண்டுக்கு பின் மொழிமாற்றம் செய்யப்படும் படம்..!!

நடிகர் விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

தமிழ் திரையுலகில் “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய்சேதுபதி. அதன் பின் தொடர்ந்து பல படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நாயகனாக வளர்ந்துள்ளார். தற்போது, இவர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பிரபலமடைந்துவிட்டார்.

சமீபத்தில், உப்பென்னா என்ற தெலுங்கு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனவே தெலுங்கு திரையுலகிலும்  விஜய்சேதுபதியின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2019 ஆம் வருடத்தில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி, விஜய் சேதுபதி நடிப்பில், வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற “சூப்பர் டீலக்ஸ்” திரைப்படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படவுள்ளது.

இத்திரைப்படத்தில் திருநங்கையாக நடித்து அசத்திய விஜய்சேதுபதிக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படப்போகும் இத்திரைப்படம், ஆஹா OTT தளத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |