தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் நடிகர் விஜய்யின் ஒரு படம் வெளியாக தயாராக இருப்பதற்கு முன்பாகவே அவரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் தற்போது விஜய்யின் 65வது படம் குறித்த அறிவிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக முருகதாஸுடன் அந்தப் படத்தை இணைய இருப்பதாக வந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் இது தற்போது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக மாறியுள்ளது.
நடிகர் விஜயின் தளபதி 65 படத்திலிருந்து முருகதாஸ் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க அரசியல் குறித்த படம் என்றும் இதன் முழு கதையை கேட்ட விஜய் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சரிடம் சொல்ல கதையில் சில மாற்றம் செய்ய சொல்லி அந்நிறுவனம் முருகதாசிடம் கேட்டுள்ளது. இதில் விருப்பம் இல்லாமல் முருகதாஸ் விலகியதாக கூறப்படுகிறது.