நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் ஆய்வு நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.
தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் , பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். தமிழக சினிமாவிலும் , அரசியலிலும் இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்த சோதனை முடிவில் அன்புச்செழியன் சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில்77 கோடி ரூபாய் ரொக்கப் பணமும் 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அதேபோல நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம் , அன்புச்செல்வன் ஆகியோருக்கு சம்மன் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் நேரடியாக விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்கள்.
இந்த நிலையில் கிடைக்கப்பட்ட ஆவணங்களை வைத்து தற்போது சென்னை பனையூர் இருக்கக்கூடிய நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில் 8 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஸ்டர் படவிநியோகம் 220 கோடிக்கு நடந்ததாகவும், அதில் லலித்குமாருக்கு 50 கோடி சென்றதாக தகவல் வெளியானதையடுத்து மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீட்டில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.