தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் லத்தி படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. மேலும் டிசம்பர் 19-ம் தேதி லத்தி படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.