தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வினோத்குமார் இயக்க, சுனைனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் விஷாலுக்கும், அனுஷா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் சில பிரச்சினைகளால் அனுஷா மற்றும் விஷாலின் திருமணம் பாதியிலேயே நின்றது. இதை தொடர்ந்து நடிகர் விஷாலின் திருமண செய்திகள் குறித்த தகவல்கள் அடிக்கடி இணையதளத்தில் வெளியாகி கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் நடிகர் விஷால் தற்போது நடிகை அபிநயாவை காதலிப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகை அபிநயாவுக்கு சரி வர காது கேட்காததால் வாய் பேச முடியாது. இருப்பினும் தன்னுடைய நடிப்பு திறமையால் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். இவர் தமிழில் நாடோடிகள், ஆயிரத்தில் ஒருவன், குற்றம் 23, பூஜை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை அபிநயாவை விஷால் காதலிப்பதாக கூறப்படும் நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.