Categories
இந்திய சினிமா சினிமா

“நடிகர்கள் ஒன்னுமே செய்வதில்லை”…. ஆனா அவங்களதான் கொண்டாடுறாங்க…. நடிகை பிரியங்கா சோப்ரா பளீர்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் சினிமாவுக்கு என்ற பிரியங்கா தற்போது முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். நடிகை பிரியங்கா அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மல்டிமேரி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நடிகை பிரியங்கா தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் ஒரு புதிய படத்தின் சூட்டிங்க்காக சமீபத்தில் மும்பைக்கு வந்துள்ளார்.

அப்போது நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது, சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் மற்றும் நடிகைகளின் வேலை மிகவும் குறைவு தான். பிறர் பேசும் வசனத்திற்கு உதடுகளை அசைக்கிறார்கள். நடனம் கூட பிறர் சொல்லிக் கொடுப்பதுதான். இப்படி நடிகர், நடிகைகளின் வேலை மிக குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றும் போது தான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும். மேலும் நானும் அப்படித்தான் நடிப்பை கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |