சினிமா நடிகர்கள் சம்பளத்தை நிர்ணயம் செய்வதில்லை என பிரகாஷ்ராஜ் சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
சினிமாவில் விஜய்,அஜித், தனுஷ், ரஜினி, கமல், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். இவர்கள் அவர்களுக்கான சம்பளத்தை மார்க்கெட் நிலைமையைப் பொறுத்து அதிகமாக கேட்பதாகவும் கேட்ட தொகையை கொடுத்த பிறகே படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்தன. தற்போது சினிமா ஹீரோக்களின் சம்பளம் குறித்து ஒரு சுவாரசியமான தகவலை பிரகாஷ்ராஜ் பகிர்ந்துள்ளார். அதில், சினிமாவைப் பொறுத்தவரையில் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களின் மார்க்கெட் நிலைமையைப் பொறுத்து தயாரிப்பாளர்கள்தான் சம்பளத்தை நிர்ணயம் செய்கிறார்கள்.
எந்த நடிகரும் நடிகைகளும் சம்பளத்தை கூட்டி கேட்பதில்லை என தெரிவித்துள்ளார். அதேபோல் சினிமா ரசிகர்கள் வளர்ந்து நிற்கும் நட்சத்திரங்களை மட்டும் ஆதரிக்காமல், புது நடிகர்களுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக அவரது படங்களையும் ரசித்து தொடர் ஆதரவை தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சினிமாவில் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்கமுடியும். திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே சினிமா வாய்ப்புகளை அள்ளித் தரும் எனவும், திறமையானவர்களை சினிமா தட்டிக் கழிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.