Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் பாதுகாப்பு “அவசர வழக்காக விசாரிக்கிறது” உயர்நீதிமன்றம் …!!

நடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கின்றது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் ,விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை நடத்த போதிய போலீஸ் வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் நடிகர் விஷால் தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

Image result for நடிகர் சங்க தேர்தல் பாதுகாப்பு

இந்த மனு மீதான விசாரணையை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம்  விசாரிக்கிறது.  நீதிபதி எப்பாஸ் தஹிலரமானி  முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் . மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளி ஆகிய இரண்டில் ஒரு இடத்தில் தேர்தல் நடத்த அனுமதிக்க விஷால் தரப்பு கோரப்பட்டுள்ளது.

Categories

Tech |