Categories
சினிமா தமிழ் சினிமா

நாட்டிற்கு நல்லதல்ல….. எல்லாரும் படிங்க….. வீடியோ போடுங்க….. நடிகை ஆத்மிகா ஆதங்கம்….!!

நடிகர்களான சூர்யா, கார்த்தி ஆகியோரை தொடர்ந்து நடிகை ஆத்மிகா EIA 2020 குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக EIA 2020 ஆர்டிகள் அமைந்திருப்பதாக பலரும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபலங்களும் இந்த EIA 2020க்கான வரைவு அறிக்கையை படித்துவிட்டு இது நல்ல முடிவு அல்ல என்ற கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர்களான சூர்யா கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் EIA 2020 ஆர்டிகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தனர்.

இவர்களது கருத்துக்கு பாஜக கட்சி சார்பிலும் மற்றும் சில வலதுசாரி அமைப்புகளை சார்ந்தவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர்களான சூர்யா கார்த்தி ஆகியோரை தொடர்ந்து நடிகை ஆத்மிகா தற்போது இந்த EIA 2020 வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தான் இந்த EIA 2020 வரைவு அறிக்கையை முழுமையாக படித்து விட்டதாகவும், நாட்டிற்கு இது நல்லதல்ல என்றும் கூறியுள்ளார். மேலும் அனைவரும் படித்து EIA 2020 குறித்த தங்களது கருத்தை வீடியோவாக பதிவிட கோரிக்கை வைத்துள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |