சின்னத்துரை நடிகை சித்ரா தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையில் புதிய தகவல் தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா அவளின் வழக்கு தொடர்பாக தற்போது தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இதில் புதிய தகவல் ஒன்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது என்னவென்றால் சித்ராவிற்கும் – ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த 2 மேதைகளுக்கு முன்பாகவே திருமணம் நடைபெற்றதாக காவல்துறையிடம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ள நிலையில், அதற்கான சான்றிதழை காண்பிக்குமாறு காவல்துறை சார்பில் ஹேமநாதிடம் போலீசார் கூறியுள்ளனர். அந்த சான்றிதழை காண்பித்தால் மட்டுமே இவர்கள் இருவரும் திருமணம் செய்தார்களா ? என்பது உறுதி செய்யப்படும். திருமணம் நடைபெற்று இருந்தால் இந்த வழக்கானது RDO விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.