சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் நேற்று இரவு அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சின்னத்திரை நடிகை சித்ரா நசரத்பேட்டை யில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனை முடிவில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 நாட்களாக போலீசார் சித்ராவின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவிற்கு திருமணம் முடிந்து விட்டதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி அவரது கணவர், தாய் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மகளின் தற்கொலைக்கு கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று அவரது தாய் திட்டவட்டமாக தெரிவித்து வந்தார். இந்நிலையில் அவரது கணவர் மீது தற்கொலை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் சித்ராவை நடிக்க வேண்டாம் என்றும், எந்த நடிகருடன் நடனமாடினார் என்று கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.