வீடு புகுந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பொறியியல் கல்லூரி நிர்வாகி மீது சினிமா நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் அதிராமபட்டினத்தை சேர்ந்த சமீரா என்பவர் எதிரொலி என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது புழலில் வசிக்கிறார். இவருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவரை படத்தில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமீரா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை வாபஸ் பெறும்படி கோவிந்தராஜ் எச்சரித்துள்ளார். அப்போதும் புகாரை வாபஸ் பெறாததால் சமீரா வீட்டில் இருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி பொருட்களை உடைத்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளதாக சமீரா போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.