Categories
இந்திய சினிமா சினிமா

மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிகையின் மகள்…. அறிவிப்பு வெளியானால் இதுவே முதல் படம்…!!

பிரபல நடிகரான மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிகையின் மகள் தேர்வு  செய்யப்பட்டுள்ளார்.

பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்விகபூர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தடக் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரி, ரூகி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார். தற்போது இவர் தோஸ்தானா2 ,  குட்லக் ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஜான்விகபூர் தெலுங்கு திரையுலகில்’மிகவும் பிரபல நடிகரான  மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டால் ஜான்விகபூர் நடிக்கும் முதல் தெலுங்கு படமாக இது இருக்கும்.

Categories

Tech |