ரைமா இஸ்லாம் ஷமு என்ற நடிகை மாயமான நிலையில், அவரின் உடல் பாலத்திற்கு அடியில் இருந்த மூட்டையிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்த ரைமா இஸ்லாம் ஷிமு என்ற நடிகை சமீபத்தில் மாயமானார். இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரனிகஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஹசரத்பூர் பாலத்தின் அருகே ஒரு மூட்டை கிடந்திருக்கிறது.
அதனுள், ஷிமுவின் சடலம் இருந்திருக்கிறது. இதுபற்றி காவல்துறை மேலதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாவது, ரைமாவின் சடலம் மூட்டைக்குள் கண்டறியப்பட்டது உண்மை. தற்போது அவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியிருக்கிறார்.