நடிகை தன்ஷிகா “யோகி டா” படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மனோபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா-3’ படத்தில் வில்லனாக வந்த கபீர்சிங் இந்த படத்திலும் வில்லனாக வருகிறார். இந்த படத்தை கவுதம் கிருஷ்ணா இயக்குகிறார். அருண் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் தயாரிக்கும் இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோவையில் நடந்தது. கிட்டத்தட்ட 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெறுகிறது.