தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன் பிறகு எங்கேயும் காதல், சிங்கம், வேலாயுதம், ரோமியோ ஜூலியட், மனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு சோகேல் என்பவருடன் இணைந்து ஒரு புதிய தொழிலை ஆரம்பித்தார். அதன்பின் சோகேல் மற்றும் ஹன்சிகாவுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது.
இந்நிலையில் சமீப காலமாகவே நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக வலைதளங்களில் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த தகவலை அவர் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் தன்னுடைய வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஹன்சிகா பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. மேலும் நடிகை ஹன்சிகாவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram