Categories
சினிமா தமிழ் சினிமா

“தோழியின் கணவரை அபகரித்த நடிகை ஹன்ஷிகா”?…. உண்மை தெரியாமல் பேசாதீங்க….. கொந்தளித்த ரசிகர்கள்…..!!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய நெருங்கிய நண்பரும் பிசினஸ் பார்ட்னருமான சோகேல் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுடைய திருமணம் டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதன் பிறகு பாரிசில் வைத்து தன்னுடைய காதலர் தனக்கு ப்ரபோஸ் செய்த புகைப்படங்களை ஹன்சிகா தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான ரிங்கி என்பவருக்கும், சோகேலுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமண நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நடிகை ஹன்சிகா கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் ஆடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஹன்சிகா தன்னுடைய தோழியின் கணவரை அபகரித்து விட்டதாக இணையவாசிகள் அவரை விளாசுகிறார்கள். இதற்கு ஹன்சிகா ரசிகர்கள் தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது உண்மை நிலவரம் தெரியாமல் யாரும் எதுவும் பேச வேண்டாம் என்றும், ரிங்கி மற்றும் சோகேல் இடையே பிரச்சனை ஏற்பட்ட பிறகே ஹன்சிகா அவரை காதலிக்க தொடங்கி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதோடு அவரின் தனிப்பட்ட விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் ஹன்சிகாவுக்கு இல்லை எனவும் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். மேலும் ஒரு பக்கம் ஹன்சிகாவை விமர்சிப்பதும் மறுபக்கம் அவருக்கு ஆதரவு கொடுப்பதுமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |