Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புத்தர் கோயிலில் ஹேம மாலினி வழிபாடு..!!

நடிகை ஹேம மாலினி பிகார் மாநிலத்தின் கயாவில் அமைந்துள்ள புத்தர் கோயிலில் வழிபாடு செய்தார்.

பிரபல நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான ஹேம மாலினி இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். தமிழில் ‘இது சத்தியம்’, ‘ஹேராம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், அடுத்ததாக அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் அவருக்கு தாயாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

71 வயதாகும் நடிகை, நேற்று பிகார் மாநிலம் கயாவில் உள்ள பிரசித்தி பெற்ற புத்தர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அறிவொளி புத்தரின் அழகான, அமைதியான கோயிலில் வழிபாடு நடத்தினேன். அங்குள்ள அமைதி நிலையையும், பிரசித்தி பெற்ற போதி மரத்தையும் பெரிதும் விரும்பினேன். ஜப்பானியர்களால் பராமரிக்கப்படும் இக்கோயில் அமைதியின் புகலிடமாகவும், தியானிக்க முடியும் வகையிலும் சிறப்பு பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக பிரமுகரான இவர், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |