Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட முதல் வீடியோ… என்னென்னு பாருங்க…!!!

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முறையாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டதற்குப் பின் படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர் தற்போது உடன்பிறப்பே எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நடிகை ஜோதிகா முதல் முறையாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள வீடியோ என்னவென்றால் சுதந்திர தினத்தன்று இமயமலையில் 70 கிலோ மீட்டர் தூரம் அவர் டிரெக்கிங் சென்றுள்ளார். அந்த வீடியோவை தான் அவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக பதிவு செய்துள்ளார்.

https://www.instagram.com/tv/CThjQDFl5Zb/

 

Categories

Tech |