Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஜோதிகாவின் அடுத்த படம்…. இயக்குனர் யார் தெரியுமா… வெளியான புதிய தகவல்…!!!

நடிகை ஜோதிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த நாயகியாகத் திகழ்ந்தவர் ஜோதிகா. ஆனால் இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சில காலம் நடிக்காமல் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார். நீண்ட ஆண்டு இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி ஆகிய படங்களின் மூலம் திரைத்துறைக்கு ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

மேலும் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து நடிகை ஜோதிகா கொரோனா காரணமாக சில நாள் எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இந்நிலையில் ஜோதிகா வசனகர்த்தா பொன்.பார்த்திபன் சொன்ன கதையை கேட்டு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அதன் பிறகு இயக்குனர் ப்ரியா இயக்கும் அடுத்த படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |