‘இந்தியன் 2’ படத்தில் அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளேன். இதற்கு முன்னாள் நான் நடித்திராத வகையில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். இது வழக்கமான பதிலாக இல்லாமல் நியாயமானது என்பதை பின்னர் தெரிந்துகொள்வீர்கள். இவ்வளவுதான் இப்போதைக்கு கூற முடியும். மேற்கொண்டு பேசினால் என்னை படக்குழுவினர் கொன்றுவிடுவார்கள் (சிரித்தவாறு கூறினார்). இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தனது சினிமா வாழ்க்கை குறித்து, “வித்தியாசமான கதையம்சங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இந்தப் புதிய தசாப்தத்தில் நடைபெறவிருக்கும் போட்டியிலும் முன்னிலை இடத்தை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவுள்ளேன்.
சினிமா மட்டுமில்லாமல் ஓடிடி (ஆன்லைன் ஸ்ட்ரீமிங்) ஷோக்களிலும் பங்கேற்கிறேன். புதுமுகங்கள், அனுபவமிக்கவர்கள் எனப் பாரபட்சம் பார்க்காமல் அனைவருடனும் பணியாற்றுகிறேன். இது கடினமாக இருந்தாலும் மிகவும் உற்சாகமாக உள்ளது” என்றார். ‘இந்தியன் 2’ படம் தவிர ஜான் ஆபிரகாம் ஜோடியாக மும்பை சகா என்ற கிரைம் ஆக்ஷன் படத்தில் நடித்துவருகிறார் காஜல்.