பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கர்மா உங்களை தாக்கத் தொடங்கி விட்டது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்திருக்கிறார்.
இந்திய தலைநகர் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் கடந்த 2020ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கி 2021 ஆம் வருடம் நவம்பர் மாதம் வரை வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். சுமார் ஒரு ஆண்டாக நடந்த இந்த போராட்டம் உலக நாடுகளின் கவனத்திற்கு சென்றது.
இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். விவசாயிகளுக்கான உரிமைகளை நிலைநாட்டுவதற்கு கனடா என்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் போராட்டச் சூழல் வருத்தமளிப்பதாகவும் கூறியிருந்தார். இந்த கருத்தை இந்தியாவில் சிலர் எதிர்த்தனர்.
இந்திய நாட்டின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிடக் கூடாது என்று இந்திய அரசு கனடா தூதரிடம் தெரிவித்தது. இந்நிலையில் சமீபத்தில் கனடாவில் கட்டாயமாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை எதிர்த்து, அந்நாட்டினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு நிலை மோசமடைந்ததால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தன் குடும்பத்தாருடன் தலைமறைவானதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்திய தலைவர்களை விமர்சித்துக்கொண்டிருக்கும் பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ இந்தியாவை எதிர்ப்பவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது அவர், நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியவுடன் ரகசிய இடத்தில் ஒளிந்து கொண்டார். கர்மா திரும்ப தாக்குகிறது என்று பதிவிட்டிருக்கிறார்.