Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ்டர் நாயகிக்கு பிறந்தநாள்!”.. புகைப்படத்துடன் வாழ்த்துக்கூறிய முன்னணி நடிகை..!!

மாஸ்டர் திரைப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனனுக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து கடந்த வருடம் ஜனவரி மாதத்தில், “மாஸ்டர்” திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. நடிகை மாளவிகா மோகனன், இத்திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதனையடுத்து, அவர், முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் மாளவிகா, நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். எனவே, ரசிகர்கள் பலரும், அவருக்கு இணையதளங்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தன் ட்விட்டர் பக்கத்தில், நடிகை மாளவிகா மோகனனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |