பிரபல முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் நடித்து வரும் பிரபல முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் மலையாள நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள “மரைக்காயர்” எனும் திரைப்படம் மிக விரைவில் வெளியாக உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து “சாணி காயிதம்”, ரஜினிகாந்துடன் “அண்ணாத்த” உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் Sarkaru Vaari Paata எனும் படத்தில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் பிரம்மாண்ட வீட்டினுடைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.