தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு தெலுங்கு சினிமாவில் வெளியான சர்காரு வாரி பாட்டா திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் என்ற திரைப்படத்திலும், தெலுங்கில் நானியுடன் இணைந்து தசரா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு தசரா பட குழுவினர் அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை இல்லாத வித்தியாசமான ஒரு கெட்டப்பில் இருக்கிறார். மேலும் போஸ்டரை பார்க்கும் போதே நடிகை கீர்த்தி சுரேஷ் அசத்தலான ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரிய வருவதால், தசரா படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Vennala is not just a name.
It’s an emotion ♥️Happy birthday to our chitthu chitthula bomma 🤗@KeerthyOfficial #Dasara pic.twitter.com/GHOCylIK79
— Hi Nani (@NameisNani) October 17, 2022