Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் வாய்ப்பை தூக்கிய பிரியாமணி..!!

அஜய் தேவ்கான் நடிக்கும் ‘மைதான்’ திரைப்படத்தில் நடிக்க புதிதாக நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்க ஒப்பமாகியிருந்த நிலையில் அவருக்குப் பதிலாக பிரியாமணி நடிக்கவுள்ளார்.

தேசிய விருது பெற்ற நடிகையான பிரியாமணி, இந்தி இணையத் தொடரான ‘த ஃபேமிலி மேன்’ தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகிவரும் ‘மைதான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், பிரியாமணி.

கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘மைதான்’ திரைப்படத்தில் நடிக்க முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருந்தார். படத்தின் சில காட்சிகளும் கீர்த்தி சுரேஷை வைத்து இயக்கப்பட்டது. முதல் நாள் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வயதான பெண் கதாபாத்திரத்துக்கு கீர்த்தி பொருத்தமில்லாமல் இருப்பது படக்குழுவினருக்கும், கீர்த்திக்கும் தெரிய வந்துள்ளது. கீர்த்தியின் உடல் எடை குறைப்பும் பாத்திரத்திற்கு பொருந்தாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

படம் செயற்கைத்தன்மை இல்லாமல் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பிருந்த இயக்குநர் அமித் ரவிந்தர்நாத், பின்னர் கீர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்து வரும் படங்களில் நிச்சயம் நடிக்க வைப்பதாக வாக்குறுதி கொடுத்தார். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து கீர்த்தி விலகிக்கொண்டார். இதனையடுத்து இந்தப் பாத்திரத்தில் நடிக்க பிரியாமணியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

Categories

Tech |