பிரபல நடிகை பாலத்திற்கு அடியில் சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
வங்கதேசத்தை சேர்ந்த ரைமா இஸ்லாம் ஷிமு என்ற பிரபல நடிகை, சில தினங்களுக்கு முன் திடீரென்று காணாமல் போனார். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது தலைநகர் டாக்காவில் இருக்கும் ஹஸ்ரத்பூர் பாலத்திற்கு அருகில், கிடந்த இப்படி சாக்குமூட்டையில் ரைமாவின் சடலம் கண்டறியப்பட்டது.
அவரின் உடலில் பல காயங்கள் இருந்தது. காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தார்கள். இந்நிலையில், ரைமாவின் உடல் கண்டறியப்பட்ட சாக்குமூட்டையில் கட்டப்பட்டிருந்த கயிறு அவரின் கணவர் ஷெகாவத்தின் வாகனத்தில் இருந்தது கண்டறியப்பட்டது.
எனவே, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் தன் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். அதன்படி, டிவி சேனல் அதிகாரி ஒருவருக்கும் ரைமாவிற்கும் பழக்கம் இருந்ததால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 17ஆம் தேதியன்று இது தொடர்பில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த ஷெகாவத் தன் மனைவி ரைமாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பிறகு, அவரின் நண்பருடன் சேர்ந்து உடலை துண்டுகளாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி பாலத்திற்கு அருகில் வீசியிருக்கிறார்கள்.