ஜம்மு காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை, தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் புட்காம் பகுதியை சேர்ந்த அமரீன் பட் என்னும் தொலைக்காட்சி நடிகை, டிக் டாக்கிலும் பிரபலமானவர். இந்நிலையில், திடீரென்று லஷ்கர் இ தொய்ப்பா என்னும் இயக்கத்தின் தீவிரவாதிகள் 3 பேர் இவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இதில், அந்த நடிகையின் உறவினரான 10 வயதுடைய ஒரு சிறுவனுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.