தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். நடிகை மஞ்சிமா தேவராட்டம் என்ற படத்தில் நடித்த போது நடிகர் கௌதம் கார்த்திக்குடன் காதலில் விழுந்தார். இருவரும் தங்களுடைய காதலை உறுதிப்படுத்திய நிலையில், நவம்பர் 28-ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக நடிகை மஞ்சிமா மோகன் திடீரென ஒரு முடிவு எடுத்துள்ளார்.
அதாவது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அனைத்து போட்டோக்கள் மற்றும் பதிவுகளை அவர் நீக்கியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் எதற்காக இப்படி செய்தீர்கள் என்று மஞ்சிமாவிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு தற்போது மஞ்சிமா மோகன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் என்னுடைய இன்ஸ்டாகிராமை மீண்டும் தொடங்க இருக்கிறேன். இந்த போட்டோக்களை எல்லாம் நீக்கியது நான் இவ்வளவு அழகாக இருக்கிறேன் என்பதற்காக அல்ல. நான் தற்போது முதலில் இருந்து இன்ஸ்=டாகிராமை தொடங்க இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை மஞ்சிமா மோகனின் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.