Categories
சினிமா

நடிகை மீரா மிதுன் தொடர் தலைமறைவு…. மத்திய குற்றப்பிரிவு போலீஸ் எடுத்த அதிரடி முடிவு….!!!!

பிரபல நடிகை மீரா மீதுன் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசினார். இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் பிறகு மீரா மிதுன் மற்றும் சாம் அபிஷேக் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், விசாரணைக்கு மீரா மீதுன் ஆஜராகாததால் அவர் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் மீரா மிதுன் தலைமறை வாகிவிட்டார். கடந்த மாதம் 19-ம் தேதி கோர்ட்டில் விசாரணை வந்த போது மீரா மிதுனை தொடர்ந்து தேடி வருவதாகவும் அவருடைய குடும்பத்தை கண்காணித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதால் அவரை போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர். ‌ அதாவது லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பு வதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் இதன் மூலம் தலைமறைவாக இருக்கும் மீரா மிதுன் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |