Categories
சினிமா தமிழ் சினிமா

“முழு நேர அரசியலில் ஈடுபடும் நடிகை நமீதா” …. எந்த கட்சியில் தெரியுமா…..? அதிரடி பேட்டி…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகை வலம் வந்தவர் நமீதா. இவர் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் மற்றும் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நமிதாவுக்கு, பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரை நிகழ்ச்சியில் தலைகாட்டி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதற்கு பிறகு நடிகை நமீதா கடந்த 2017-ம் ஆண்டு வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நமிதா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்‌. அதன்பிறகு நடிகை நமீதா செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் தன்னுடைய குழந்தைகளின் நலனுக்காக சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறினார். மேலும் பாஜகவில் உறுப்பினராக இருக்கும் நமிதா இனி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |