Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாரா பற்றிய ஆபாச கமெண்ட்…. ஆதரவு கருத்தை நீக்கியதால் கொந்தளித்த பாடகி சின்மயி…. பரபரப்பு…!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நாயகியாக ஜொலிப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடித்த கனெக்ட் திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்ட போது நடிகை நயன்தாரா தன்னுடைய கணவருடன் வந்திருந்தார். அப்போது நயன்தாரா அணிந்திருந்த உடையை பற்றி பலரும் இணையதளத்தில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டனர். அதாவது நயன்தாராவின் மார்பகம் பற்றி மிகவும் ஆபாசமான கருத்துக்களை பலரும் இணையதளத்தில் பதிவிட்டிருந்தனர்.

இதற்கு பாடகி சின்மயி தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட வலைதளம் பாடகி சின்மயி பதிவிட்ட கருத்துக்களை பார்க்க முடியாத அளவுக்கு நீக்கிவிட்டது. இதனால் கொந்தளித்த சின்மயி, இதுபோன்ற ஆபாசமான கருத்துக்கள் வரும்போது அதை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்யாமல், என்னுடைய கருத்தை மற்றவர்களுக்கு தெரியாமல் மூடி மறைக்கும் போதே உங்களுடைய அட்மின் லட்சணம் தெரிகிறது என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |